தற்போதைய செய்திகள்

மணமேடையில் காதலன் - தாலி கட்டும் நேரத்தில் பெற்ற மகளை எரித்து கொன்ற கொடூர தந்தை

தந்தி டிவி

காதலுடன் ஓடிச் சென்ற மகளை திருமணம் செய்து வைப்பதாக கூறி அழைத்து வந்து, தந்தையே எரித்து கொன்ற கொடூரம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது. ஜால்னா பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, தான் காதலித்து வந்த உறவினருடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதையறிந்த சிறுமியின் தந்தை, இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறி மகளை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். உறவினர்களை அழைத்து இருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணத்திற்காக, மணமேடைக்கு வந்த மகளை இழுத்து சென்ற தந்தை மற்றும் சிறுமியின் உறவினர், கழுத்தில் கயிற்றை மாட்டி மரத்தில் தொங்கவிட்டுள்ளனர். அதில் சிறுமி இறந்ததால் ஆதாரத்தை அழிக்க, உடலை எரித்துள்ளனர். இந்த கொடூரம் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் கண் முன் அரங்கேறியும், அதை தடுக்க யாரும் முன்வரவில்லை. தகவலறிந்த போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றியதுடன், தந்தையான சந்தோஷ் சரடு மற்றும் உறவினர் நாம்தேவ் சரடை கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்