தற்போதைய செய்திகள்

தாயின் டிராமா.. தந்தையின் ஸ்கெட்ச்.. பாதி வழியிலே உஷாரான மகள்.. பெரும் விபரீதத்தை தடுத்த Whatsapp

தந்தி டிவி
• ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனது மனைவியை கடத்தியதாக கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெண்ணின் அப்பா, அம்மா உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர் • விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள லட்சுமியாபுரத்தை சேர்ந்த ராஜேஸ்வரன், நாகராணி என்பவரை சமீபத்தில் காதல் திருமணம் செய்துள்ளார். • இந்த நிலையில் நாகராணியின் தாயார் முருகேஸ்வரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் தனது தாயை பார்ப்பதற்கு நாகராணி ஸ்ரீவில்லிபுத்தூர் வந்துள்ளார். • தொடர்ந்து முருகேஸ்வரி உடல்நிலை மோசமானதால் மதுரை கொண்டு செல்லப்பட்டிருப்பதாக கூறி நாகராணியின் தந்தை அவரை காரில் வேறு இடத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. • இதனையடுத்து நாகராணி தனது கணவர் ராஜேஸ்வரனுக்கு whatsapp மூலம் தகவலை தெரிவிக்கவே அவர், தனது மனைவி கடத்தப்பட்டு இருப்பதாக போலீசில் புகார் அளித்தார் • புகாரின் அடிப்படையில் நாகராணியின் அப்பா சேது, அம்மா முருகேஸ்வரி, சித்தப்பா உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்