தற்போதைய செய்திகள்

நாடு விட்டு நாடு பறந்த காதல்...ரஷ்ய பெண்ணை கரம்பிடித்த தஞ்சை இளைஞர் - தமிழ் கலாச்சாரத்தில் ஈர்ப்பு

தந்தி டிவி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள புலவஞ்சி கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன். கடந்த பத்து ஆண்டுகளாக ரஷ்யாவில் யோகா ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். அங்கு அவரிடம் ரஷ்யாவை சேர்ந்த அல்பினா என்ற பெண்மணி யோகா கற்று வந்தார். நாளடைவில் இருவருக்குள்ளும் இருந்த நட்பு காதலாக மாறியது. இதையடுத்து, தங்களின் காதலை இருவீட்டாரிடமும் தெரிவித்து, அவர்களின் சம்மதத்துடன் பிரபாகரன் - அல்பினா தம்பதியர் இன்று திருமணம் செய்து கொண்டனர். தனக்கு ரஷ்ய கலாச்சாரத்தை விட தமிழ் கலாச்சாரம் மிகவும் பிடித்துள்ளதாகவும்... விரைவில் தமிழ் கற்று.. தமிழில் அனைவரிடமும் உரையாடுவேன் என்றும் மணமகள் அல்பினா தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்