தற்போதைய செய்திகள்

ரயில்வே கேட்டில் மோதிய லாரி - நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் | Thanjavur

தந்தி டிவி

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் தரங்கம்பாடி சாலை ரயில்வே கேட்டில் லாரி மோதியதில் ஓ.எச்.டி. லைன் அறுந்து கேட் சிக்னல் பழுதானது.

ரயில்வே கேட் இரும்பு கம்பி உயர் அழுத்த மின் கம்பியில் மோதி சிக்கி அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

அறுந்த ஓஎச்டி லைனை சீரமைக்கும் பணியில் காலதாமதம் ஏற்பட்டதால் ஆடுதுறை, குத்தாலம், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்பட்டன.

தொடர்ந்து ஆடுதுறை கேட்பகுதியை கடக்க ஏதுவாக மாற்று ஏற்பாடாக ரயில்களில் டீசல் இன்ஜின் பயன்படுத்தி இயக்கப்பட்டது.

இதனால் சென்னை மார்க்கம், திருச்சி மார்க்கம், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், திருப்பதி, ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு சுமார் 3 மணி நேரம் காலதாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது.

சீரமைப்பு பணியை இரவு நேரத்தில் ரயில்வே பணியாளர்கள் மேற்கொண்டனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் கார்த்தியிடம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், பொதுப்பணித்துறைக்கு டீசல் பிடித்துச் செல்லும் லாரி என்பது முதற்கட்ட விசாரணை தெரியவந்தது.

அதிகாலை 5 மணிக்கு சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், ரயில்வே பணியாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்