தற்போதைய செய்திகள்

கவன குறைவால் பறிபோன உயிர்... "போக்குவரத்து கழகம் ரூ.1 கோடி வழங்க வேண்டும்" - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

அரசு பேருந்து மோதியதில் பலியான நபரின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க போக்குவரத்துக் கழகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒசூரை சேர்ந்த குமார் என்பவர் கடந்த 2016ம் ஆண்டு சேலம் பேருந்தி நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது, அரசுப் பேருந்து பின்பக்கமாக மோதியதால் உயிரிழந்தார். இதையடுத்து, 2 கோடி ரூபாய் இழப்பீடு கோரி, அவரது குடும்பத்தினர், மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த தீர்ப்பாயம், 83 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஓட்டுனரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டுள்ளதால், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர். மேலும், இழப்பீட்டு தொகையை, ஒரு கோடியே 4 லட்சத்து 24 ஆயிரமாக உயர்த்தி வழங்கவும் அவர்கள் உத்தரவிட்டனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு