தற்போதைய செய்திகள்

வாட்டி வதைக்கும் வெயிலுக்கு கொஞ்சம் பிரேக்.. இரவு வெளுத்து வாங்கியது கனமழை

தந்தி டிவி

வாட்டி வதைக்கும் வெயிலுக்கு கொஞ்சம் பிரேக்.. இரவு வெளுத்து வாங்கியது கனமழை

தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை வெளுத்து வாங்கியது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், அரை மணி நேரம் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.கும்பகோணத்தில், நான்கு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இரவு நேரத்தில் பெய்த மழையால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், அதன் சுற்றுப்புறங்களில் எதிர்பாராத விதமாக பலத்த மழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்