தற்போதைய செய்திகள்

ஆபாச படம் போல் 'வித்தியாச' உடலுறவால்.. செப்டிங் டேங்கில் மிதந்த மாமன் மகன் - 'முறை' வாசல் செய்த 'முறை' பொண்ணு..!

தந்தி டிவி

திருமணமான பின்பு மாமன் மகனுடன் தகாத உறவில் இருந்த இளம் பெண், சைக்கோ கில்லர் பாணியில் அரங்கேற்றிய கொடூர கொலை சம்பவத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

செங்கோட்டை அடுத்த இலத்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் பேச்சியம்மாள் என்ற பிரியா... இவர் சாமிதுரை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

சாமிதுரை கோவையில் தங்கி எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்த நிலையில், 2 குழந்தைகளுடன் இலத்தூரிலே வாடகைக்கு வீடு எடுத்து தனியே வசித்து வந்தார் பேச்சியம்மாள்.

அப்போது, எதிர் வீட்டில் இருந்த நெருங்கிய உறவினரும், மாமன் மகனுமான மாடசாமி என்பவருடன் பேச்சியம்மாளுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது...

இந்த பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறிய நிலையில், இது மாடசாமியின் தாய் ராமலட்சுமிக்கு அரசல் புரசலாக தெரியவந்துள்ளது...

இருவரையும் கண்டித்த அவர், கோயமுத்தூரில் உள்ள பேச்சியம்மாளின் கணவருக்கும் தெரியப்படுத்தி உனது மனைவியை உன்னுடனே அழைத்து செல் எனவும், உனது மனைவியின் நடவடிக்கையின் சரியில்லை எனவும் எச்சரித்துள்ளார்....

இதை பேச்சியம்மாளின் கணவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலையில், பேச்சியம்மாள் தனது மாமன் மகனுடன் அடிக்கடி தனியே சந்தித்து தகாத உறவை வளர்த்து வந்துள்ளார்...

"அவளோட 2 குழந்தைகளும் எங்க வீட்டுலதான் இருக்கும்"

"பேரன், பேத்தி மாதிரி நாங்க அவங்கள பாத்துக்கிட்டோம்"

"எந்நேரமும் செல்போனும், கையுமாதான் இருப்பா"

"அவளோட புருஷன் கிட்ட அப்பவே சொன்னேன்"

"உன்னோடையே அழைச்சிட்டு போனு, கேக்கல"

ஒரு கட்டத்தில் பேச்சியம்மாள் இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலைக்கு சென்ற மாடசாமி, பேச்சியம்மாளை அவருடைய குழந்தைகள் மற்றும் கணவரை விட்டு தன்னுடனே வருமாறு வற்புறுத்தியிருக்கிறார்...

இதற்கு பேச்சியம்மாள் மறுப்பு தெரிவித்த நிலையில், இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டு மோதல் முற்றியுள்ளது. ஒரு கட்டத்தில் மாடசாமியின் டார்ச்சரை சமாளிக்க முடியாமல் திணறிய பேச்சியம்மாள், சம்பவத்தன்று மாடசாமியை வீட்டிற்கு தனியே அழைத்துள்ளார்...

அப்போது சில ஆபாச வீடியோக்களை மாடசாமிக்கு திரையிட்டு காண்பித்த அவர், அதில் வருவதை போல மதுவின் கை,கால்களை கட்டி போட்டுள்ளார்....

காம மோகத்தில் விபரீதத்தை அறியாமல் இருந்த மாடசாமியை, திடீரென தலையணையால் முகத்தை அழுத்தியும், கழுத்தை நெறித்தும் சைக்கோ கில்லர் பாணியின் கொலை செய்திருக்கிறார் பேச்சியம்மாள்....

இதையடுத்து, உடலை என்ன செய்வதென்று தெரியாமல் முழித்த பேச்சியம்மாள், மாடசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி, தாய் மற்றும் தனது சகோதரனிடம் நாடகமாடியிருக்கிறார்...

இதன்பின்பு, மாடசாமியின் வீட்டருகே அவரது உடலை போட்டு விட நினைத்த மூவரும், மாடசாமியின் சகோதரிக்கு ஒரு வாரத்தில் திருமணம் நடைபெற இருப்பதால், பேச்சியம்மாள் குடியிருந்த வீட்டில் உள்ள செப்டிக் உறை கிணற்றிலே உடலை போட்டு மூடியுள்ளனர்...

இதையடுத்து, எதுவும் நடக்காதது போல சர்வ சாதரணமாக மாடசாமியின் வீட்டின் முன்பே வாசல் தெளித்து, கோலம் போட்ட படியே, மாடசாமியை அவரது குடும்பத்தினர் தேடி வருவதை கண்டும் காணாமல் இருந்துள்ளார்...

"திங்கள் கிழமை ஆளைக் காணோம்"

"எதுவுமே நடக்காத மாதிரி வீடு தெளிச்சி கோலம் போட்டுட்டு இருந்தா"

"என் மகள் கல்யாணத்துக்கு கூட குடும்பமே வந்தாங்க"

"என் புள்ளைய கொன்னுட்டு எப்படி கல்யாணத்துக்கு வர முடியும்"

இதற்கடுத்து, கோவைக்கு சென்ற பேச்சியம்மாள் கணவருடனே வசிக்க ஆரம்பித்த நிலையில், கிட்டதட்ட 8 மாதங்கள் கழித்து பேச்சியம்மாள் இலத்தூரில் குடியிருந்த வீட்டை அதன் உரிமையாளர் புதுப்பிக்கும் பணியில் இறங்கியுள்ளார்...

அப்போது, செப்டிக் டேங்க் உறை கிணறினுள் எலும்பு கூடுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், போலீசில் புகாரளித்த நிலையில், அதன் விசாரணையிலே அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்தது...

இதனிடையே மீட்கப்பட்ட உடல் தனது மகன் இல்லையெனக் கூறி, சில வாதங்களை முன்வைத்து மாடசாமியின் தாய் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது...

"என் பையன் பாலிஸ்டர் கைலி எல்லாம் உடுத்த மாட்டான்"

"கைலயும், கழுத்துலையும் மெல்லிசான நகைகளையே அணிவான்"

"தற்போது வரை என் மகனின் முழு விவரங்களும் கிடைக்கல"

"நான் எப்படி அது என் புள்ளனு ஒப்புக்கொள்ள முடியும்"

இந்நிலையில், கோவையில் வசித்து வந்த பேச்சியம்மாள் அவருடைய தாய் மாரியம்மாள் மற்றும் 17 வயது சகோதரன் என மூவரையும் கைது செய்த போலீசார், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு