தற்போதைய செய்திகள்

AR ரகுமான் ஸ்டுடியோவில் நடந்த பயங்கரம்.. 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து லைட்மேன் துடிதுடித்து பலி..!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் ஸ்டுடியோவில் பணியில் ஈடுபட்டிருந்த லைட்மேன் 40 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்து மரணம் அடைந்தார்.

தந்தி டிவி

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு கும்மிடிப்பூண்டியில் AR FilmCity என்ற பெயரில் ஸ்டுடியோ உள்ளது. இங்கே ஒரு சில படப்பிடிப்புகள் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சத்யராஜ் நடிக்கும் 'வெப்பன்' படத்திற்கான படப்பிடிப்புக்கு ஸ்டுடியோவில் செட் போடப்பட்டு வருகிறது.

இதற்காக சாலிகிராமத்தைச் சேர்ந்த லைட்மேன் குமார் (47) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை 40 அடி உயரத்திலிருந்து மின் விளக்குகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கால் தடுக்கி மேலிருந்து கீழே தவறி விழுந்தார்.

உடனே அவரை சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அவர் கொண்டுவந்த வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்