தற்போதைய செய்திகள்

"2 நிமிஷத்துல உசுர எடுத்துட்டாங்க.. 2 குழந்தையும் அனாதை ஆகிடுச்சு" - நடுரோட்டில் கதறும் பெண்

தந்தி டிவி

சேலத்தில், கணவரை கொலை செய்த 3 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட பெண் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் உடையாப்பட்டி பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் என்பவரை, அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கல்லால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த லோகேஸ்வரன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், கொலையாளிகளை கைது செய்யக்கோரி, உயிரிழந்தவரின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. லோகேஷ்வரனை கொலை செய்த 3 பேரை போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும் என்றும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்