தற்போதைய செய்திகள்

"தோட்டாவ இந்த ஓட்டையில் போடனும்" - டிஐஜி-யை அதிர வைத்த எஸ்ஐ...துப்பாக்கியை பிடிக்க தெரியாத காவலர்கள்

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநிலம் சன்ட் கபீர் நகரில் உள்ள காவல் நிலையத்தில் டிஐஜி பரத்வாஜ் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது, துப்பாக்கியில் எப்படி தோட்டா போட்டு, சுடுவது என்று கேட்டதற்கு, உதவிஆய்வாளர் ஒருவர், தோட்டாவை முன்பக்க குழாய் வழியாக போட வேண்டும் என்றது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தோட்டாவை எப்படி எடுப்பாய் என்றதற்கு, துப்பாக்கியை கவிழ்த்து காட்டியது சிரிப்பலையை ஏற்படுத்தியது. இதே போன்று, பல காவலர்கள் துப்பாக்கியை எப்படி இயக்குவது என்று தெரியாமல் தடுமாறி நின்றது அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக டிஐஜி பரத்வாஜ் தெரிவித்துள்ளார். காவலர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். துப்பாக்கியை இயக்குவது கூட தெரியாதவர்கள் காவல்துறையினர் இருப்பது மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Anderson Wins Oscar | 6 ஆஸ்கர்களை அள்ளிக் குவித்தது ஆண்டர்சனின் `One Battle After Another’

Oscars 2026 | Michael B. Jordan | சிறந்த நடிகருக்கான ஆஸ்கரை தட்டித்தூக்கிய மைக்கேல் ஜோர்டான்

Odisha Hospital Fire | கட்டாக் ஹாஸ்பிடலில் பற்றி எரிந்த ICU - 10 பேர் உடல் கருகி கோர பலி

🔴LIVE : Chennai | Encounter | அதிகாலையிலேயே சென்னையில் என்கவுண்டர்

Chennai Encounter | விடிந்ததும் அதிர்ச்சி - ரவுடி `சேரா’வின் கூட்டாளி தொப்பை கணேஷ் என்கவுன்டர்