தற்போதைய செய்திகள்

வெட்ட வெட்ட வளரும் கால் எலும்புகள்.. வாழ்க்கையையே தொலைத்த இளைஞர் - வீட்டை விற்றும் தீராத அரிய நோய்

தந்தி டிவி
• சுரேஷ், பாதிக்கப்பட்ட இளைஞர் • "தற்போது சைக்கிள் கூட ஓட்ட முடியவில்லை.. • நடக்கவும் முடியவில்லை" • "தாய் தான் எனக்கு சமைத்து போடுகிறார்" • எட்டாம் வகுப்பு படிக்கும் போது திடீரென்று • ஒரு நாள் கால்களை மடக்க முடியாத நிலை ஏற்படவே.... அதன் பிறகு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் தான் தெரியவந்தது... அவருக்கு அரிய வகை நோயான மல்டிபிள் எக்ஸ்டா சோசிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று. அதாவது இந்த நோய் காரணமாக அவரது உடலில் எலும்புகள் வளர்ந்து கொண்டே இருக்கும். • இதையடுத்து, இதற்காக கடந்த 2006ல் முதன் முறையாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வலது கால் மூட்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட சுரேஷ்... இதுவரை 8 முறை அவ்வாறு அறுவை சிகிச்சை செய்துள்ளார். • சுரேஷ், பாதிக்கப்பட்ட இளைஞர் • "காப்பீடு திட்டத்தின் கீழ் 4 முறை அறுவை சிகிச்சை செய்திருக்கிறேன்" • "வீடு விற்று, கடன் வாங்கி இதுவரை 8 அறுவை சிகிச்சை செய்துள்ளேன்" • இப்படி வீடு வாசல் என பலவற்றை விற்று... எலும்புகளை அறுத்து அறுத்து அறுவை சிகிச்சை செய்தும் பலன் கிடைக்கவில்லை... நகம் போல் வெட்ட வெட்ட எலும்புகள் வளர்ந்து கொண்டே தான் செல்கின்றன.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்