தற்போதைய செய்திகள்

விபத்தை தடுக்க Latest Technology..தண்ணியடித்து எழுப்பும் போலீஸ்

தந்தி டிவி

கடந்த சில நாட்களாக திருப்பதி மலை பாதையில் தொடர்ந்து விபத்துகள் அதிகரித்து வருகின்றன... இதனால் மலை பாதையில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க தேவஸ்தான நிர்வாகத்துடன் இணைந்து திருமலை போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்... அதன்படி, மலையில் வாகனம் ஓட்டி வரும் ஓட்டுநர்கள் முகத்தில் தண்ணீர் அடித்து போலீசார் அனுப்பி வைக்கின்றனர். இதற்காக திருப்பதி மலையில் உள்ள ஜிஎன்சி டோல்கேட்டில் ஸ்பிரேயுடன் காத்திருக்கும் போலீசார், வாகனங்களை நிறுத்தி ஓட்டுநர்களுக்கு முகத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து புத்துணர்வு பெற செய்து வழி அனுப்பி வைக்கின்றனர். போலீசாரின் இந்த நூதன முயற்சியால் ஓட்டுநர்களின் தூக்கம் கலைகிறது... இருந்தாலும் வாகன ஓட்டிகள் இந்த "தண்ணியடி வைத்தியத்தை" வேண்டா வெறுப்பாகத்தான் வாங்கிச் செல்கின்றனர்... ஆண்களே இப்படி என்றால், பெண்களாக இருந்தால் மேக்கப் கலைந்து விட்டதென சண்டைக்கே வந்து விடுவார்கள் என்பது தான் உண்மை... ஆனால் போலீசாரின் இத்தகைய நடவடிக்கை பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை