இன்று மருத்துவபடிப்புக்கான தமிழகம் அளவிலான மருத்துவ தரவரிசை பட்டியல் வெளியானது. இதில் போரூர் அடுத்த வில்லிவாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளியில் படித்த மாணவரான முருகன் என்பவர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், முதல் முறை நீட்தேர்வில் தோல்வியடைந்ததாகவும், இரண்டாவது முறையாக தற்போது வென்றுள்ளதாகவும் கூறினார். மேலும் அவர் கூறுகையில், சரியான வழிகாட்டுதல் இருந்தால், நீட் தேர்வு குறித்து அரசுப்பள்ளி மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்தார்.