தற்போதைய செய்திகள்

நிலம் விற்பனையில் தகராறு...ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் - 1 மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ்

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தியவர்களை ஒரு மணி நேரத்தில் போலீசார் மடக்கி பிடித்தனர்.

சமுத்திரப்பட்டியை சேர்ந்த அழகப்பன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை விற்ற நிலையில் பத்திரப்பதிவு செய்வதில் காலதாமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த எதிர்தரப்பினர் கண்ணன், முத்தையா, வீரப்பன், மருது ஆகியோர் ஒன்றிணைந்து, அழகப்பனை கடத்தியுள்ளனர். கடத்தல் தொடர்ப்பாக அழகப்பனின் உறவினர் புகார் அளித்ததன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சாணார்பட்டி காவல் நிலையம் அருகே அழகப்பன் கடத்தப்பட்ட காரை மடக்கி பிடித்தனர். அதிலிருந்த அழகப்பன் மீட்கப்பட்ட நிலையில் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். 

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ