தற்போதைய செய்திகள்

ஒற்றை க்ளிக்... லட்சக்கணக்கில் வங்கி பணம் அபேஸ்... EB பில் ரூபத்தில் திருட்டு கும்பல்... உஷார் மக்களே..

தந்தி டிவி

சென்னையில் மர்மநபர்கள் செல்போனுக்கு அனுப்பிய லிங்க்கை க்ளிக் செய்ததால் வங்கியிலிருந்து லட்சக்கணக்கில் பணம் பறிபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தென்மன்டல சைபர் கிரைம் போலீசாரிடம் சென்னையை சேர்ந்த இருவர் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், தாங்கள் 12 ரூபாய்க்கு மின் கட்டணம் செலுத்தலாம் என்றும், தங்கள் வங்கி கணக்கு இன்றுடன் முடக்கப்பட உள்ளதாகவும் கூறி மர்ம நபர்கள் லிங்க்குடன் கூடிய செய்தியை செல்போனுக்கு அனுப்பியுள்ளனர். இதை நம்பி லிங்க்கை க்ளிக் செய்த இருவருடைய கணக்கில் இருந்தும் சுமார் 3 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் ,மோசடியில் ஈடுபட்டது ஹரியனாவை சேர்ந்த கும்பல் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மஞ்சித் சிங், நாராயண சிங் ஆகிய இருவரை கைது செய்துள்ள போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்