தற்போதைய செய்திகள்

போலீசையே சிக்கவைத்து எஸ்கேப்பான வில்லாதி வில்லி காவலர்களுக்கு விழுந்த தர்ம அடி...

தந்தி டிவி

திருநள்ளாறு சனிபகவான் கோயிலுக்கு வந்திருந்த மதுரை நெல் வியாபாரி கருப்புசாமியின் மனைவி உமாதேவியின் 7 சவரன் தங்கச் சங்கிலி மாயமானது. இதுகுறித்த புகாரில் சி.சி.டி.வி.யை போலீசார் ஆய்வு செய்தபோது, செயினை பறித்தது கோவையைச் சேர்ந்த லட்சுமி என்பது தெரியவந்தது. வேறொரு வழக்கில் திருவிடைமருதூர் நீதிமன்றத்திற்கு லட்சுமி வந்துள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்றனர். குழந்தையுடன் இருந்த லட்சுமியை காரில் ஏற்ற முயன்றபோது, தன்னை மானபங்கம் செய்வதாகக் கூறி லட்சுமி கூச்சலிட்டார். மஃப்டியில் இருந்த போலீசாரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து, நீதிபதி முன்பு கொண்டு சென்றனர். தாங்கள் காரைக்கால் போலீசார் என்று கூறியதை ஏற்க மறுத்த நீதிபதி, ஆய்வாளர் வந்தால் விடுவிப்பதாக கூறியுள்ளார். திருநள்ளாறு ஆய்வாளர் அறிவுசெல்வன், விளக்கம் அளித்து போலீசாரை அழைத்து வந்தார். இந்நிலையில், லட்சுமி தனது குழந்தையுடன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்