தற்போதைய செய்திகள்

மன்னிப்பு கேட்ட கனிமொழி - நன்றி சொன்ன குஷ்பு

தந்தி டிவி

மன்னிப்பு கேட்ட கனிமொழி - நன்றி சொன்ன குஷ்பு

திமுக நிர்வாகி ஆபாசமாக பேசியதற்கு, திமுக எம்பி கனிமொழி மன்னிப்பு கோரிய நிலையில், ட்விட்டரில் குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார். சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய நிர்வாகி சைதை சாதிக் என்பவர், பாஜக பெண் நிர்வாகிகளான குஷ்பு, நமிதா, காயத்ரி ரகுராம் போன்றவர்கள் குறித்து ஆபாசமாக பேசினார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள குஷ்பு, இதுதான் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான புதிய திராவிட மாடல் ஆட்சியா என கேள்வி எழுப்பினார். இதையடுத்து, பெண்ணாகவும், மனித நேயத்துடனும் மன்னிப்பு கேட்பதாக கனிமொழி எம்பி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதை சகித்துக்கொள்ளவே முடியாது என்றும் முதல்வர் ஸ்டாலினும் திமுகவினரும் இதை ஆதரிக்க மாட்டார்கள் என்றும் கூறியிருந்தார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள குஷ்பு, உங்களது நிலைப்பாட்டையும், ஆதரவையும் உண்மையிலேயே பாராட்டுகிறேன் எனவும் பெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதைக்காக எப்போதும் துணை நிற்கிறீர்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்