தற்போதைய செய்திகள்

தைப்பூச நாயகன் கந்தனை காண கால் கடுக்க காத்து கிடக்கும் பக்தர்கள்

தந்தி டிவி

தைப்பூசம் முருகனுக்கு உகந்தநாள் என்பதால் முருகன் கோவில்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.

குறிப்பாக குன்றத்தூர் குன்றின் மீது அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய காலை முதலே ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

தற்போது குன்றின் மீது அமைந்துள்ள முருகனை தரிசிக்க சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் கடும் வெயிலையும் பொறுப்பெடுத்தாமல் நீண்ட வரிசையில் காத்துள்ளனர்.

காலை முதலே கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் இலவச தரிசனத்தை போல ரூ.50 கொடுத்து கட்டண தரிசனத்திலும் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் கூட்டம் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்

தற்போது குன்றத்தூர் முருகன் கோவில் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் மலையின் மீது வாகனங்கள் அனுமதித்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்ற காரணத்திற்காக மலைக்கு செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது

பக்தர்கள் கோவிலின் படிக்கட்டு வழியாக மட்டுமே சென்ற சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் பக்தர்கள் அரோகரா அரோகரா என விண்ணை மட்டும் அளவிற்கு கோஷங்கள் எழுப்பி முருகனை தரிசித்து வருகின்றனர் ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது

கூட்டத்தை கட்டுப்படுத்தவும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்கவும் குன்றத்தூர் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேண்டுதலை நிவர்த்தி செய்ய காவடி மற்றும் அலகு குத்தி வரும் பக்தர்கள் தரிசனம் செய்ய மாற்று வழியில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்