தற்போதைய செய்திகள்

குமரி டூ ஜோத்பூர்...விமானத்தில் பறந்த சினேரியஸ் கழுகு

ஒக்கி புயலின்போது கன்னியாகுமரியில் மீட்கப்பட்ட சினேரியஸ் கழுகு பாதுகாப்புடன் ஜோத்பூர் உயிரியல் பூங்காவிற்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது.

தந்தி டிவி

கடந்த 2017-ஆம் ஆண்டு, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த ஆசாரிப் பள்ளத்தில் இருந்து ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட சினேரியஸ் கழுகை வனத்துறை அதிகாரிகள் மீட்டு உரிய சிகிச்சை அளித்தனர். அந்த பறவைக்கு ஒக்கி எனப் பெயரிட்டு, உதயகிரி உயிரியல் பூங்காவில் வைத்து வனத்துறை அலுவலர்கள் பராமரிது வந்தனர். இந்தியாவில் சினேரியஸ் வகை கழுகு வாழ்வதற்கு ஏற்ற பருவநிலையை கருத்திற்கொண்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் மாச்சியா உயிரியல் பூங்காவில் உள்ள இயற்கை சூழலில் விடுவிக்க தீர்மானிக்கப்பட்டது. விமான போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்பு அனுமதியுடன் அந்தப் பறவை, விமானத்தில் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஜோத்பூக்கு கொண்டு செல்லப்பட்டு, உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்