தற்போதைய செய்திகள்

குள்ள விஜய்க்கு போட்ட ஸ்கெட்ச்.. குறுக்கே வந்து உயிரை விட்ட ரிதம்.. கடலூர் கடற்கரையில் காட்டி கொடுத்த சிக்னல்

தந்தி டிவி
• சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த விஜய் என்கிற குள்ள விஜய் வீட்டுக்கு கடந்த 5-ஆம் தேதி இரவு வந்த ஒரு கும்பல், அவரைத் தாக்கியபோது, அவர் தப்பியோடிவிட்டார். • அப்போது அங்கு வந்த விஜய்யின் நண்பர் ரிதத்தை அந்த கும்பல் வெட்டி விட்டு தப்பிச் சென்றது. • இதில், ரிதம் உயிரிழந்து விட்ட நிலையில், விஜய் அரசு ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். • இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த புழல் போலீசார், 3 தனிப்படைகள் அமைத்து விசாரித்ததில், புழல் பகுதியை சேர்ந்த டில்லிபாபு, செபாஸ்டின் டேனியல் ஆகியோர் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. • அவர்களின் செல்போன் சிக்னலை வைத்து, கடலூர் கடற்கரையில் பதுங்கியிருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். • அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கடந்த ஆண்டு விஜய் தனது நண்பர்களுடன் சேர்ந்து கோவிந்தராஜ் என்பவரைத் தாக்கியதற்கு பழிதீர்க்கும் விதமாக, கோவிந்தராஜின் நண்பர்கள் விஜய்யைக் கொலை செய்ய வந்தது தெரியவந்தது. • இதனையடுத்து, வழக்கில் தொடர்புடைய சரத்குமார், கார்த்திக், கோவிந்தராஜ், விக்னேஷ்வரன் என மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Nepal ``49 பேர் மூட்டை; அடுக்கி வைத்திருந்த சிசிடிவியை பார்த்தேன்’’ - டிராவல்ஸ் உரிமையாளர் பேட்டி

Nellai இளைஞர் தலையை அறுத்து அவர் வீட்டு வாசலிலேயே வீச்சு - நெல்லையில் உச்சகட்ட பயங்கரம்

Dindigul ``ஒரு உசுருல்ல.. நாலு பிஞ்சு உசுரு’’ - அநியாயமாக 4 குழந்தைகள் பலி; கொடூரத்தை செய்தது யார்?

PM Modi | Uzbekistan | உஸ்பெகிஸ்தானில் இருந்து மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட PM மோடி

NEET PG Exam Issue | நீட் தேர்வு எழுதுவதில் சிக்கல்..தேர்வு மையத்திலேயே மாணவர்கள் போராட்டம்