தற்போதைய செய்திகள்

இது டீ கடையா? டாஸ்மாக் கடையா? - களைகட்டும் கட்டிங் விற்பனை...வெளியான பகீர் வீடியோ

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒரு டீ கடையே டாஸ்மாக் பார் போல செயல்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலம்பட்டி அருகே நாகோஜன ஹள்ளியை சேர்ந்த பெண் கவுன்சிலர் காஞ்சனா. இவர் தன் கணவருடன் சேர்ந்து தேநீர் கடை நடத்தி வரும் நிலையில், கடையினுள் நேரக் கட்டுப்பாடுகள் இன்றி மறைமுகமாக மதுபானங்கள் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், டாஸ்மாக் கடையில் கூட கிடைக்காத அளவுக்கு ஒரு குவார்ட்டரை பாதியாக பிரித்து இங்கே கட்டிங் விற்பனையும் களை கட்டுவதாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், மதுப்பிரியர் ஒருவர் ஒரு கட்டிங் மதுவை ரசித்துக் குடிக்கும் காட்சிகளும் டேபிள் எங்கும் காலி மது பாட்டில்கள் கிடக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்