தற்போதைய செய்திகள்

தமிழகத்தை உலுக்கிய கிருஷ்ணகிரி ஆணவக் கொலை... தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி உத்தரவு..!

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தரங்கரைஅருகே காதல் திருமணம் செய்து கொண்ட சுபாஷ் என்பவரை அவரது தந்தையே ஆணவக் கொலை செய்ததோடு, அடைக்கலம் கொடுத்த மூதாட்டியும் வெட்டி கொல்லப்பட்டார். மகனையும், தாயையும் வெட்டி கொலை செய்த தண்டபாணியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் மாமனாரிடம் வெட்டுபட்டு பலத்த காயங்களுடன் தப்பிய இளம் பெண் அனுசியா, மருத்துவமனையில் சிகிசை பெற்று வருகிறார். இந்த ஆணவக் கொலை தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் அருண் ஹேல்டர், வரும் 20ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விருந்தினர் மாளிகையில் விசாரணை நடத்த உள்ளார். அப்போது, இதுதொடர்பான விவரங்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூர் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, கைது செய்யப்பட்ட தண்டபாணியை, விசாரணைக்குப் பிறகு, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்