தற்போதைய செய்திகள்

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர்! - தலைமறைவாக உள்ள 2 ஆசிரியர்களுக்கு வலை

தந்தி டிவி
• கிருஷ்ணகிரி அருகே அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்கள் 2 பேர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. • கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் எலத்தகிரியில் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. • இந்த பள்ளியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். • இங்கு வரலாறு ஆசிரியராக பணிபுரியும் 59 வயதான ராஜா என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். • மேலும் ஆய்வக உதவியாளரான நடேசனும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததும் உறுதியான நிலையில் மாணவிகள் இதுகுறித்து தங்கள் பெற்றோரிடம் சொல்லவே, பின்னர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. • இதன்பேரில் 2 பேர் மீதும் போக்சோவில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர். • அதேநேரம் இவர்கள் 2 பேரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

🔴LIVE : Gas Cylinder |திரும்புகிறதா லாக்டவுன் காலம்? - காலி சிலிண்டரோடு வீதியில் இறங்கிய மக்கள்

Vaiko | DMK Alliance | தொகுதியை குறைத்த திமுக.. வைகோ எடுத்த திடீர் முடிவு

Breaking | MP Karthik Chidambaram | கார்த்தி சிதம்பரம் எம்.பி., அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

🔴LIVE : பங்க்-கே மூடப்பட்டது - இறங்கியது அடுத்த பேரிடி

Gold Price Today | தங்கம் விலையில் இன்றும் தெரிந்த மாற்றம்