தற்போதைய செய்திகள்

5 உயிர்களைக் காவு வாங்கிய கிருஷ்ணா கல்லூரி சுவர் விபத்து - துணை மேயர் பரபரப்பு குற்றச்சாட்டு

தந்தி டிவி

கோவை குனியமுத்தூர் அடுத்த மைல்கல் பகுதியில், கிருஷ்ணா கலை,அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியினை சுற்றி, பிரம்மாண்டமான புதிய சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், பழைய சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் சுவர் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த 4 தொழிலாளர்கள், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒரு தொழிலாளர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து ஒப்பந்ததாரர் சீனிவாசன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே விபத்து நடைபெற்ற பகுதியில், கோவை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பேசிய துணை மேயர், சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் இருப்பது தொடர்பாக 2 மாதங்களுக்கு முன்னரே கல்லூரி நிர்வாகத்தை எச்சரித்ததாகவும், ஆனால் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

BREAKING || ஆழ்துளை கிணற்றில் 3 வயது சிறுமி...நெஞ்சை நொறுக்கும் காட்சி

Nellai Crime அலறிய நெல்லை ஜங்ஷன் - கத்தியால் குத்தி.. தன் கையையும் அறுத்ததால் பகீர்

Virat Kohli | Team India | West Indies | செய்து காட்டினார் விராட் கோலி - அடுத்த சாதனை

Minister Aadhav | உதயநிதிக்கு ஓபன் சவால்விட்டு ஆவேசம் - `பதவி விலகுகிறேன்’ என மதுராந்தகத்தில் சபதம்

Maduranthakam | DMK | "எவ்வளவு தைரியம் இருந்தா.." - மதுராந்தகத்தில் அனல்பறக்க பேசிய உதயநிதி