தற்போதைய செய்திகள்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு : இறுதிகட்டத்தை நெருங்கும் விசாரணை | kodanadu

தந்தி டிவி

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், இது தொடர்பான வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில் சயான் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகியோர் அஜரான நிலையில், தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து பல்வேறு தகவல் பரிமாற்ற ஆதாரங்களை சேகரித்து, ஆய்வுக்கு அனுப்பி உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். மேலும் புலன் விசாரணை நடைபெற்று வருவதால் ஆய்வு முடிவுகள் வரும்வரை கால அவகாசம் தேவைப்படுவதாகவும், விசாரணைக்காக வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டியுள்ளதால் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தனர். சிபிசிஐடி போலீசாரின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஏப்ரல் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்