ஊழல் களங்கம் இல்லாத தலைவராக பிரதமர் மோடி வலம் வருகிறார் என்று, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷான் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை திநகரில் அனைத்து இந்திய தெலுங்கு கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.
அப்போது பேசிய அமைச்சர், நாட்டில் பல மொழிகள் இருந்தாலும், அனைவரும் ஒற்றுமை உணர்வோடு விழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.
பிரதமர் மோடியின் நடவடிக்கைகளால் வல்லரசு நாடுகளின் மரியாதை நமது இந்தியாவுக்கு அதிகரித்துள்ளது என்று கூறினார். மோடி பிரதமராகப் பொறுப்பேற்றதில் இருந்து, ஊழல் தொடர்பான விமர்சனங்களை எங்கும் சந்திக்கவில்லை என்றும் கூறினார்.