கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஏல சீட்டு நடத்தி பெண் ஒருவர் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மீனா. இவர் அப்பகுதியில் ஏல சீட்டு நடத்தி வருவதாக தெரிகிறது. இவரிடம் குவைத்தில் தற்போது ஓட்டுநராக பணியாற்றிவரும் அப்பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், 3 லட்சம் ரூபாய் கட்டியுள்ளார். இந்நிலையில், ஏல பணத்தை மீனா மோசடி செய்துவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் வலியுறுத்தி குவைத்தில் இருந்து சுரேஷ் வீடியோ வெளியிட்டு உள்ளார்.