தற்போதைய செய்திகள்

மது அருந்தியதால் கிட்னி செயலிழப்பு... அறுவை சிகிச்சைக்கு பயந்து கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு - செங்கல்பட்டில் அதிர்ச்சி

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் கரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கூலி வேலை செய்து வரும் அருண்குமார், தினமும் மது அருந்துவதை பழக்கமாக கொண்டு உள்ளார். சில தினங்களூக்கு முன் உடல்நிலை பாதிப்படைந்த அவர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஒரு கிட்னி செயல் இழந்துவிட்டதாகவும், அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு பயந்து போன அருண்குமார் வீட்டிற்க்கு வந்து, அழுது புலம்பிய நிலையில், அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து வந்த பாலூர் போலீசார் அருண்குமாரின் உடலை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்