தற்போதைய செய்திகள்

காதல் திருமணம் செய்த பெண் கடத்தல் வழக்கு...தந்தையை கைது செய்த போலீசார் - தென்காசியை அதிர வைத்த சம்பவம்

தந்தி டிவி

தென்காசி அருகே காதல் திருமணம் செய்த இளம் பெண் குருத்திகா கடத்தப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த அவரின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தில் காதல் திருமணம் செய்த குருத்திகாவை அவரது உறவினர்கள் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், குருத்திகாவின் தந்தை நவீன் என்பவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில், 3 மாதங்களாக தலைமறைவாயிருந்த நவீன் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டார். அவரை அகமதாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தமிழகம் அழைத்து வந்துள்ள போலீசார், மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, கைது செய்யப்பட்ட நவீனுடன், அவரது மகள் குருத்திகாவையும் அழைத்து வரப்பட்ட நிலையில், அவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே