தற்போதைய செய்திகள்

காணாமல் போனதாக கூறப்பட்ட ஆசிரியை.. வீட்டின் படுக்கையறையில் இருந்து சடலமாக மீட்பு - கணவர் தலைமறைவானதால் பரபரப்பு

தந்தி டிவி
• கேரளாவில் காணாமல் போனதாக கூறப்பட்ட பள்ளி ஆசிரியை, வீட்டின் படுக்கையறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... • கேரள மாநிலம், இடுக்கி பகுதியைச் சேர்ந்த தம்பதி பிஜேஷ் மற்றும் அனுமோல். இவர்களில், அனுமோல் நர்சரி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். • இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியில் இருந்து வந்த அனுமோல் எங்கு சென்றார் எனத் தெரியவில்லை என்று அவரது கணவர் பிஜேஷ், அனுமோலின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். • அனுமோலின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்த நிலையில், வீட்டிற்கு வந்த அவரது பெற்றோரை பிஜேஷ் திருப்பி அனுப்பியுள்ளர். • இதையடுத்து, போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. • இதனிடையே, அனுமோலின் பெற்றோர் அவரது கணவர் வீட்டிற்கு சென்று பார்த்த போது, படுக்கையறையில் போர்வையில் சுற்றப்பட்டு அனுமோல் சடலமாக கிடந்துள்ளார். • தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு தலைமறைவாக இருக்கும் பிஜேஷை தேடி வருகின்றனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு