தற்போதைய செய்திகள்

"அம்மா என்னை தூக்கு மா"...மேடையில் செல்ல பிள்ளை செய்த செயல்...பேச முடியாமல் திணறிய ஆட்சியர்

தந்தி டிவி

சர்வதேச திரைப்பட நிகழ்வில் பங்கேற்று பேசிய மாவட்ட ஆசியரிடம், மேடையில் அவரது செல்ல மகன் சுட்டித்தனம் செய்த வீடியோ சர்ச்சியாகியுள்ளது.

பத்தனம் திட்டா மாவட்ட ஆட்சியராக இருக்கும் திவ்யா ஐயர், சர்வதேச திரைப்பட விழாவில் தனது மகனுடன் பங்கேற்றார்.

மேடையில் திவ்யா ஐயர் பேசிக் கொண்டிருந்த போது அங்கு சென்ற குழந்தை, தன்னை தூக்கும்படி கூறியுள்ளது.

உடனே மகனை தூக்கி கொண்டு ஆட்சியர் பேசிய போது, செல்ல பிள்ளையின் சேட்டையால் அவர் தனது பேச்சை தொடர முடியாமல் தடுமாறினார்.

ஆட்சியரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலானதும், விமர்சனங்கள் எழுந்தன.

அதற்கு, ஐ.நா.வுக்கு குழந்தையுடன் சென்று பெண்கள் உரையாற்றியதை சுட்டிக்காட்டிய திவ்யா ஐயர், விடுமுறை நாள் என்பதால் தன்னுடன் மகனை அழைத்து சென்றது எந்த வகையில் தவறாகும் என கேள்வி எழுப்பியுள்ளார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்