தற்போதைய செய்திகள்

என்னை விமர்சித்தால் பதவி பறிக்கப்படும்" அமைச்சர்களுக்கு கேரள ஆளுநர் எச்சரிக்கை

தந்தி டிவி

தன்னை விமர்சித்தால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது மான் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஆரிப் முகமது கான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஆளுநருக்கு ஆலோசனை வழங்க முதலமைச்சருக்கும் அமைச்சரவைக்கும் முழு உரிமை உண்டு என்று கூறியுள்ளார். அதேவேளையில், ஆளுநர் பதவியின் கண்ணியத்தை கெடுக்கும் வகையில் அமைச்சர்கள் கருத்து தெரிவித்தால், பதவியை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். கேரளாவில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்நிலையில், யாராக இருந்தாலும் அரசியல் சாசன கடமையைச் செய்ய வேண்டும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பிந்து கூறினார். இதனால் கோபமடைந்துள்ள ஆரிப் முகமது கான், அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்