தற்போதைய செய்திகள்

மலையாள திரையுலகில் கோடிக்கணக்கில் கருப்பு பணம் - வருமான வரித்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி
• மலையாள திரைத்துறையில் 225 கோடி ரூபாய் கருப்பு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. • கேரளாவில் கடந்த டிசம்பர் மாதம்  பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளர்களான ஆன்டனி பெரும்பாவூர், ஆன்டோ ஜோசப், லிஸ்டின் ஸ்டீபன், நடிகரும், தயாரிப்பாளருமான பிரித்விராஜ் உள்பட சினிமா தயாரிப்பாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். • இந்த சோதனை குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன் படி, மலையாள சினிமாவில் 225 கோடி ரூபாய்க்கு, கருப்புப் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. • இதன் மூலம் வருமானவரித் துறைக்கு ரூ.72 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. • பிரபல தயாரிப்பாளர்கள் வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கிக் குவித்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. • படங்களை வெளிநாடுகளுக்கு விநியோகித்ததன் மூலமும் பெரும் மோசடி நடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. • இவர்களது வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் குறித்தும் வருமானவரித் துறை விசாரணை நடத்தி வருகிறது.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்