தற்போதைய செய்திகள்

பணக்காரர்கள் தான் குறி... கேரள எல்லையில் மாட்டிய இளைஞர்கள் - சிக்கிய வீரியமிக்க போதைப்பொருள்

தந்தி டிவி
• தென்காசியில் இருந்து கேரள மாநிலம் புனலூருக்கு சென்ற கேரளா அரசு பேருந்தை நிறுத்தி, அதில் உள்ள பயணிகளை போலீசார் சோதனை செய்தனர். • அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த 2 இளைஞர்களின் உடைமைகளை சோதனை செய்தபோது, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 32 கிராம் எடையுள்ள எம்.டி.எம்.ஏ. என்ற போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. • அவற்றை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். • அதில், கேரள மாநிலம் காசர்கோட்டை பகுதியை சேர்ந்த முகமது மற்றும் இம்ரான் என தெரியவந்தது. • மேலும், பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப்பொருளை, ஒரு கிராம் 10 ஆயிரம் ரூபாய் என, வசதி படைத்த நபர்களை குறிவைத்து விற்பனை செய்ய இருந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. • கைதான இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்