தற்போதைய செய்திகள்

வெடித்து சிதறிய சிப்ஸ் கடை - கேரள வீதியில் பரபரப்பு

தந்தி டிவி

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் சிப்ஸ் கடையில் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தானது, அடுத்தடுத்து 5 கடைகளுக்கு பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது...

பத்தனம்திட்டா நகரில் உள்ள சிப்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கடைகள் எரிந்து நாசம்: தீயை அணைக்கும் போது கடையிலிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததில் தீயணைப்பு வீரர்கள் உயிர்தப்பினர்.

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா சென்ட்ரல் ஜங்ஷன் பகுதியில் உள்ள சிப்ஸ் கடை ஒன்றில் சிப்ஸ் போடும் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பின்னர், தீ அருகில் இருந்த பேக்கரி, செருப்பு கடை மற்றும் மொபைல் கடைக்கும் பரவியது.

உடனடியாக தீயணைப்பு த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது சிப்ஸ் கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்து தீ மேலும் பரவியது.

தீயணைப்பு வீரர்கள் இருவர் தீயை அணைத்து கொண்டிருந்த போது கேஸ் சிலிண்டர் வெடித்து அந்த சிலிண்டர் அதி வேகமாக வெளியே வந்து விழுந்தது.

இதில் நல்வாய்ப்பாக இரு வீரர்கள் உயிர் தப்பினர். தீயை போராடி அணைத்தனர். இந்த விபத்தில் சுமார் 5 பேர் தீக்காயம் அடைந்துள்ளனர்.

வெடித்து சிதறிய சிப்ஸ் கடை - கேரள வீதியில் பரபரப்புஅருகில் உள்ள கடைகளில் தீ பரவியது தீ போராடி அணைக்கப்பட்டது. கடையில் இருந்த அனைவரும் வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. நகருக்குள் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்

TN Election 2026| தேர்தல் ரிசல்ட்.. தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு