தற்போதைய செய்திகள்

கேரளாவை உலுக்கிய படகு விபத்து.. கை விலங்குடன் காவலில் இருக்கும் ஓனர்

தந்தி டிவி

கேரளா படகு விபத்து தொடர்பாக, படகின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி கடற்கரையில் படகு கவிழ்ந்த விபத்தில், நீரில் மூழ்கி 22 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் முதல் முதியோர் வரை உயிரிழந்த சம்பவம், நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், மீன்பிடி படகை சுற்றுலா படகாக மாற்றி அமைத்தது தெரியவந்தது. இதனிடையே, தலைமறைவாக இருந்த படகின் உரிமையாளர் நாசர் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நாசர், கை விலங்குடன் காவலில் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்