தற்போதைய செய்திகள்

தோப்பில் எரிந்த நிலையில் கிடந்த சடலம்..பின்னணியில் 'சொந்த ரத்தமா'..?கரூரில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

மாயனூர் அடுத்த ராசாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த சகோதரர்களான கருப்பண்ணன் மற்றும் காத்தவராயன் ஆகியோருக்கு இடையே, நிலம் சம்பந்தமாக தொடர்ந்து பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தோட்டத்திற்கு தண்ணீர் விடுவதாக கூறிவிட்டு கருப்பண்ணன் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராத நிலையில், தோட்டத்திற்கு அருகே, அவர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது, உடலை எடுக்க எதிர்ப்பு தெரிவித்த உறவினர்கள், கருப்பண்ணனை அவரது தம்பி காத்தவராயன் எரித்து கொலை செய்ததாக போராட்டம் நடத்தினர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு