தற்போதைய செய்திகள்

கரூர் ஐடி ரெய்டு ... ஈபிஎஸ் வெளியிட்ட அறிக்கை

தந்தி டிவி

வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருடர்களும், கொள்ளையர்களும் இரவில்தான் வீடு புகுவார்கள் எனக்கூறியுள்ள ஆலந்தூர் பாரதி, தமிழ்நாட்டில் திருடர்களும், கொள்ளையர்களும் இரவில் சுதந்திரமாக உலா வருகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறாரா? என வினவியுள்ளார். வருமான வரித்துறையினர் முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டு வந்திருந்தால், தக்க பாதுகாப்பு அளித்திருப்போம் என கரூர் காவல்துறை கண்காணிப்பாளர் கூறுவதாகவும், தான் ஒரு அதிகாரி என்பதை மறந்துவிட்டு, தி.மு.க உறுப்பினர்போல் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில், சோதனையோடு நின்றுவிடாமல், தவறு இழைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், வருமான வரித்துறையினரை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை