தற்போதைய செய்திகள்

வேலை செய்து கொண்டிருக்கும்போதே பலியான கணவன், மனைவி.. மனதை உலுக்கும் சோகம்

தந்தி டிவி
• கர்நாடகாவில் கட்டிடப் பணியின் போது மண் சரிந்து விழுந்ததில், பெண் உட்பட மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். • தட்சினகன்னடா மாவட்டம் சுள்ளியா பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் கதக் மாவட்டத்தைச் சேர்ந்த சோமசேகர ரெட்டி, அவரது மனைவி சாந்தா மற்றும் ஒரு தொழிலாளி ஆகியோர் பணியில் ஈடுபட்டிருந்தனர். • அப்போது கட்டிடத்தின் பின்பகுதியில் இருந்த மரம் வேரோடு சரிந்து கட்டிட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. • இதில் மூன்று பேரும் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தனர். • சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், ஜேசிபி இயந்திரம் மூலமாக மீட்பு பணிகளை தொடங்கினர். • இரண்டு பேர் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில்,ஒருவரது உடலை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. • முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கட்டிடப் பணிகளை மேற்கொள்ளவில்லை என கட்டிட உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்