கர்நாடக காங்கிரஸ் தலைவரும், கனகபுரா தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளருமான டி.கே.சிவகுமார் வாக்களிக்கும் முன்பு கோயிலில் சாமி தரிசனம் செய்தார்...
ராமநகராவின் கனகபுராவில் உள்ள ஸ்ரீ கெங்கரம்மா கோயிலில் அவர் சிறப்பு வழிபாடு நடத்தினார். அவரது சகோதரரும், எம்பியுமான டி.கே.சுரேஷ் உடனிருந்தார். தொடர்ந்து அவர் கனகபுராவில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.