தற்போதைய செய்திகள்

கர்நாடகாவில் முன்னாள் சபாநாயகரை திட்டிய முன்னாள் முதல்வர் குமாரசாமி வருத்தம் தெரிவித்தார்

தந்தி டிவி

கர்நாடகாவில் முன்னாள் சபாநாயகரை முன்னாள் முதல்வர் குமாரசாமி கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கோலார் மாவட்டம் மஸ்தேனஹள்ளி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியை முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆய்வு செய்தார்.

அப்போது, பள்ளியை இந்த நிலைமையில் வைத்துக் கொண்டு, தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான ரமேஷ் குமார், மற்ற இடங்களில் கதை பேசி வருகிறார் என்று கொச்சையான வார்த்தைகளால் திட்டினார்.

குமாரசாமி முதல்வராக இருந்தபோது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இதே ரமேஷ் குமார்தான், சபாநாயகராக இருந்தார்.

இந்த நிலையில், சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் எழுந்ததால்,

பள்ளியின் நிலைமையை பார்த்து வந்த கோபத்தில் தகாத வார்த்தை வந்ததாகவும் ரமேஷ் குமாரையோ வேறு யாரையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும் ட்விட்டரில் குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்