தற்போதைய செய்திகள்

கர்நாடக சட்டமன்ற தேர்தல்...விறுவிறுப்பாக முடிந்த வேட்புமனு தாக்கல் - வெளியான முக்கிய தகவல்

தந்தி டிவி

கர்நாடக சட்டமன்றத் தேர்தல், மே மாதம் 10-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான வியாழக்கிழமை ஒரே நாளில், ஆயிரத்து 691 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.ஒட்டுமொத்தமாக இதுவரை 3 ஆயிரத்து 632 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில், பெண் வேட்பாளர்கள் 304 பேர், ஒரே ஒரு திருநங்கை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.மொத்தமுள்ள 3 ஆயிரத்து 632 வேட்பாளர்களில், பலர் இரு முறைக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதால், மொத்தமாக இதுவரை 5 ஆயித்து 102 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறவுள்ளது.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..