• சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் ஆதார் பதிவு மையம் செயல்பட்டு வருகிறது.
• காரைக்குடியை சேர்ந்த ஹரி என்பவர், தனது தங்கையின் கைரேகை புதுப்பித்தல் சேவைக்காக ஆதார் மையம் சென்றுள்ளார்.
• அதற்கு அங்கிருந்த சண்முகப்பிரியா என்ற பெண் ஊழியர், 120 ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது.
• அதற்கு ஹரி ரசீது கேட்ட நிலையில், அவரை நீண்ட நேரமாக பெண் ஊழியர் காத்திருக்க வைத்ததாகவும் தெரிகிறது.
• பின்பு மீண்டும் ரசீது கேட்ட நிலையில், ஆத்திரமடைந்த அந்த பெண் ஊழியர், சக ஊழியர்களுடன் சேர்ந்து ஹரியை தாக்கியுள்ளார்.
• இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.