தற்போதைய செய்திகள்

கிழித்தவனுக்கு நன்றி சொல்லி பேனர்..அதையும் கிழித்த அடாவடி பாய்ஸ் - நொந்து போன பாஜக நிர்வாகி

தந்தி டிவி

காரைக்காலில் கோயில் விழாவுக்காக பா.ஜ.க நிர்வாகி வைத்த பிளக்ஸ் பேனர்களை மர்ம நபர்கள் மீண்டும் மீண்டும் கிழித்ததால் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். காரைக்கால் நெடுங்காடு பகுதியில் உள்ள மனோன்மணி மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி அப்பகுதியை சேர்ந்த பா.ஜ.க மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் அதிபன், நெடுங்காடு பிரதான சாலையில் பிளக்ஸ் பேனர் வைத்தார். இதனை மர்ம நபர்கள் கிழித்ததால், மீண்டும் அதே இடத்தில் வேறொரு பிளக்ஸ் வைத்தார். அதனையும் மர்ம நபர்கள் கிழித்தெறிந்ததால், வெறுப்படைந்த பா.ஜ.க. நிர்வாகி,

பேனரை கிழித்த நண்பர்களுக்கு நன்றி என்றுகூறி மீண்டும் பிளக்ஸ் வைத்தார். அதனையும் மர்ம நபர்கள் கிழித்ததால், இதற்கு மேல் தன்னை சோதிக்க வேண்டாம் என்பதுபோல் மிகவும் நொந்துபோன நிலையில் காணப்பட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்