தற்போதைய செய்திகள்

காற்றில் கரைந்த கபிலன் வீட்டு தூரிகை பேஸ்புக்கில் போட்ட பதிவு..இப்படி ஒரு முடிவா?

தந்தி டிவி

தமிழ் சினிமாவின் பிரபலமான பாடலாசிரியரான கபிலனின் மகள் தான் இந்த தூரிகை. வயது 28 என்றாலும் அதற்கேற்றார் போல தன்னையும் தன் திறமைகளையும் வெளிக்கொண்டு வந்தவர்... 2020ல் ஆங்கிலத்தில் இணைய இதழ் ஒன்றை தொங்கி நடத்தி வந்த இவர், அவ்வப்போது நாளிதழ்களில் பல்வேறு கட்டுரைகளையும் எழுதி வந்தார்.

ஆடை வடிவமைப்பாளரான இவர், நடிகர் அசோக் செல்வன், ஜி.வி.பிரகாஷ், சின்னத்திரை நடிகைகள் பாவனி, பரீனா என பலருக்கும் உடைகளை வடிவமைத்துக் கொடுத்துள்ளார். அதற்கேற்றார் போல தனியாக ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தார்..

இவர் வடிவமைத்த உடைகள் எல்லாம் அதீத கவனம் பெறவே, அதைப் பார்த்த இயக்குநர் வசந்தபாலன், தான் எடுக்க உள்ள அநீதி என்ற படத்திற்கு தூரிகை கபிலனுக்கு காஸ்ட்யூம் டிசைனர் வாய்ப்பு கொடுத்துள்ளார்.

அதற்கான பணிகளும் நடந்து கொண்டிருந்த நிலையில் இந்த செய்தியையும் மகிழ்ச்சியோடு இணையத்தில் பகிர்ந்திருக்கிறார் தூரிகை...

அதேபோல் எழுத்தாளர்கள், திரையுலகில் உள்ளவர்களுடன் நல்ல நட்பு பாராட்டிய தூரிகை, அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பெண்ணிய மற்றும் பெரியாரிய சிந்தனைகள் அதிகம் கொண்டவரான தூரிகை தான் நடத்தும் ஆங்கில இணைய இதழின் ஆண்டு விழாவை சென்னை ஐஐடியில் வரும் 16ஆம் தேதி நடத்த திட்டமிட்டு இருந்தார்...

அதற்காக விருந்தினர்களை அழைப்பது, நிகழ்ச்சி திட்டமிடல் என பம்பரமாக சுழன்று கொண்டிருந்த தூரிகை தன் வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது பலருக்கும் பேரதிர்ச்சி தான்...

திருமண வயதை மகள் எட்டிவிட்டாள் என அறிந்த பெற்றோர் அவரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாகவும், அதனால் கடந்த சில மாதங்களாக வீட்டில் சண்டை, சச்சரவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்த தூரிகை, வீட்டில் தனியே இருந்த போது இந்த விபரீத முடிவை எடுத்திருக்கிறார் என கதறுகிறார்கள் அவரை சார்ந்த பலரும்...

தற்கொலை செய்து கொள்வது எதற்கும் தீர்வாகாது என சில ஆண்டுகளுக்கு முன்பாக பேஸ்புக்கில் பதிவிட்ட தூரிகையா இப்படி ஒரு முடிவை எடுத்தது என பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

நட்ட நிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ என பதிவிட்ட தூரிகை, இப்போது காற்றில் கரைந்து வானில் ஒரு நட்சத்திரமாகி இருக்கிறார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்