தற்போதைய செய்திகள்

"ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்களிடம்..." அம்பலமான மன்மத பாதிரியாரின் பாலியல் லீலை! - முக்கிய வீடியோக்கள் உள்ள செல்போனை தேடும் போலீஸ்

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ, தேவாலயத்திற்கு வரும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததை அடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, பெனடிக்ட் ஆன்டோவிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், மருமகளிடம், பாதிரியார் வாட்ஸ் அப் சாட்டிங்கில், சில்மிஷம் செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், பாதிரியாரின் மடிக்கணினி மற்றும் செல்போன் திருடிய புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், செல்போனுடன் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். அந்த நபர் கைது செய்யயப்படும் பட்சத்தில், பாதிரியாரின் செல்போனை மீட்டு, அதனை சோதனை செய்தால் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 2 வாரங்களில், பாதிரியார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்