தற்போதைய செய்திகள்

நள்ளிரவில் திடீரென கதவை தட்டும் சத்தம்... திறந்து பார்த்த உரிமையாளருக்கு கத்தி குத்து - அதிர்ச்சி பின்னணி..!

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம், வலியவிளைகாலணி பகுதியில் ரெத்தினராஜ் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, நள்ளிரவில் வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டுள்ளது. இதனால், கதவை திறந்த ரெத்தினராஜ் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அபின் மற்றும் காட்வின் ஆகிய ஒருவரும் வீட்டின் அருகே நின்றதால், அவர்களிடம் சென்று இது குறித்து கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த இருவரும், ரெத்தினராஜை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்திவிட்டுச் சென்றனர். இதையடுத்து, ரெத்தினராஜை அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் போலீசாரிடம் புகாரளித்தனர். புகாரின் பேரில் இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்