• கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே மர்மமான முறையில் உயிரிழந்து வரும் காகங்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
• வடக்கு வள்ளியாவிளைப் பகுதியில் நேற்று முதல் ஆங்காங்கே காகங்கள் சுருண்டு விழுந்து உயிரிழந்து வருகின்றன.
• தற்போதுவரை,15க்கும் மேற்பட்ட காகங்கள் ஆங்காங்கே உயிரிழந்து கிடப்பதால், அப்பகுதி மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
• மேலும், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.