தற்போதைய செய்திகள்

திமுக நகர மன்ற தலைவரின் காரை உருட்டுகட்டையால் அடித்து நொறுக்கிய இளைஞர்.. பெண் பணியாளர்களிடம் மட்டும் குறைகளை கேட்டதால் ஆத்திரம்

தந்தி டிவி
• கள்ளக்குறிச்சியில் பெண் தூய்மை பணியாளர்களிடம் மட்டும், குறைகளை கேட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், திமுக நகர மன்ற தலைவரின் அரசு காரை அடித்து நொறுக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். • விளம்பார் கிராமத்தை சேர்ந்த இளைஞர் அமர்நாத், கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளராக பணி செய்து வந்துள்ளார். • இந்நிலையில் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரை அழைத்த நகராட்சி ஆணையர் குமரன், நகர மன்ற தலைவர் சுப்புராயலு முன்னிலையில் கூட்டம் நடத்தி அனைவருக்கும் பிரியாணி விருந்து அளித்துள்ளார். • இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர் அமர்நாத் திடீரென உருட்டு கட்டையை எடுத்து வந்து நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே நின்றிருந்த திமுக நகர மன்ற தலைவர் சுப்புராயிலுவின் அரசு காரை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளார். • இந்த சம்பவத்தை கண்ட நகராட்சி அலுவலகத்தில் இருந்தவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி காவல் நிலைய போலீசாரை வரவழைத்து இளைஞர் அமர்நாத்தை போலீசில் ஒப்படைத்தனர். • போலீசார் அமர்நாத் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். • விசாரணையில், நகராட்சி ஆணையர் குமரன் பெண் பணியாளர்களை மட்டும் அழைத்து பேசுவதாகவும், ஆண் பணியாளர்களை அழைத்து பேசவில்லை என்ற அதிருப்தி காரணமாகவே காரை அடித்து நொறுக்கியதாக தெரிய வந்துள்ளது.

Breaking | Maharashtra | 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து கோர விபத்து | உள்ளே சிக்கியவர்கள் நிலை?

Gold Price Today | ரூட்டை மாற்றிய தங்கம் ரேட்.. இன்றைய விலையிலும் மாற்றம்

Breaking | CM Vijay | பரபரக்கும் காவிரி விவகாரம் | திடீரென பிளானை மாற்றிய CM விஜய்

Breaking | Ramanathapuram | Crime | மனைவி, மாமியாரை வெ*டி கொ*ற கணவன் | கோர்ட் அதிரடி

Thiruparankundram Lamp Issue | திருப்பரங்குன்றம் தீப விவகாரம்..காலையிலேயே வெளியான அப்டேட்