தற்போதைய செய்திகள்

தந்தை, மகன் கூட்டு களவாணி...வங்கிகளில் கடன் வாங்கி ரூ.24 கோடி மோசடி - கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• கள்ளக்குறிச்சி அருகே, வங்கிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து 24 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, தந்தை, மகன் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். • சின்னசேலம் கூகையூர் அருகே, ஆயில் மில் நடத்தி வரும் பெரியசாமி என்பவர், தனியாருக்கு சொந்தமான குடோன்களை வாடகைக்கு எடுத்து, வங்கிகளில் 24 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. • இது தொடர்பாக, குடோன் உரிமையாளர் ஜெயராமன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். • அதில், கள்ளக்குறிச்சியில் 36 குடோன்களை வாடகைக்கு எடுத்த பெரியசாமி, சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலம் 24 கோடியே 33 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. • இதையடுத்து, பெரியசாமி, அவரது மகன் பாலுசாமி உள்பட நான்கு பேரை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்